தமிழ்நாட்டில் 231 மில்லியன் டாலர்கள் முதலீடு - மிட்சுபிஷி எலக்ட்ரிக்

ஜப்பானை சேர்ந்த மின்னணு சாதனங்கள் தயாரிப்பாளரான மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனம், தமிழ்நாட்டில் 1891 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக, சென்னையை அடுத்த திருவள்ளூரில், மிட்சுபிஷி நிறுவனம் புதிய ஆலை ஒன்றை கட்டமைக்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இன்று காணொளி காட்சி வாயிலாக, தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழக அரசு மற்றும் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி […]

ஜப்பானை சேர்ந்த மின்னணு சாதனங்கள் தயாரிப்பாளரான மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனம், தமிழ்நாட்டில் 1891 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக, சென்னையை அடுத்த திருவள்ளூரில், மிட்சுபிஷி நிறுவனம் புதிய ஆலை ஒன்றை கட்டமைக்க உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இன்று காணொளி காட்சி வாயிலாக, தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழக அரசு மற்றும் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில், மிட்சுபிஷி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் கட்டமைக்கப்படும் தொழிற்சாலையில் ஏசி களுக்கான கம்பரசர் உருவாக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தொழிற்சாலைக்காக கும்மிடிப்பூண்டி தாலுகாவில் மஹிந்திராவுக்கு சொந்தமான கிராமத்தில் 52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த தொழிற்சாலை மூலம் 2000 வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும், அதில் 60% பெண்களுக்கான வேலை வாய்ப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu