ஜப்பானின் மிசோஹோ நிறுவனம் சென்னையில் வணிக மையத்தை அமைக்கிறது

February 1, 2024

ஜப்பானைச் சேர்ந்த மிசோஹோ நிறுவனம் சென்னையில் வணிக மையம் அமைத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி சார்ந்த சேவைகளை மிசோஹோ குடும்பம் வழங்கி வருகிறது. ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு, அது சார்ந்த சேவைகளை நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில், 250 ஊழியர்கள் சென்னை மையத்தில் பணி செய்கின்றனர். அடுத்த ஆண்டில் கிட்டத்தட்ட 1000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் வணிக மையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மிசோஹோ நிறுவனத்தின் இந்தியப் […]

ஜப்பானைச் சேர்ந்த மிசோஹோ நிறுவனம் சென்னையில் வணிக மையம் அமைத்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி சார்ந்த சேவைகளை மிசோஹோ குடும்பம் வழங்கி வருகிறது. ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு, அது சார்ந்த சேவைகளை நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில், 250 ஊழியர்கள் சென்னை மையத்தில் பணி செய்கின்றனர். அடுத்த ஆண்டில் கிட்டத்தட்ட 1000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் வணிக மையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மிசோஹோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் தர்மராஜா, மிசோஹோ நிறுவனம் சென்னை தேர்ந்தெடுத்துள்ளது குறித்து பேசினார். அப்போது, “சென்னையில் சாதகமான சூழல் நிலவி வருவதால், தொழில்நுட்பத் துறை முதலீடுகள் அதிக அளவில் ஈர்க்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னையை மிசோஹோ நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது” எனக் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu