நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் உறக்க நிலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நிலவில் துல்லியமாக தரை இறங்கிய முதல் விண்கலமாக ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் சாதனை படைத்தது. அதன் பிறகு, எரிபொருள் தீர்ந்ததால் உறக்க நிலைக்கு சென்றது. இது மீண்டும் விழித்தெழுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி, நிலவில் மீண்டும் சூரிய வெளிச்சம் கிடைத்தவுடன், விண்கலம் செயல்படத் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, விண்கலம் மீண்டும் உறக்க நிலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விண்கலம் செயல்பாட்டில் இருந்த கடந்த சில நாட்களில், அதன் பல்வேறு பாகங்களின் செயல்பாடுகளை பரிசோதித்ததாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஜாக்சா தெரிவித்துள்ளது. துல்லியமான செயல்பாடுகள் இல்லாவிட்டாலும், பெரும்பாலான பகுதிகள் செயல்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளது.