நிலவில் 3ம் முறையாக இரவு நாட்களை கடந்து ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் சாதனை

கடந்த ஜனவரி மாதத்தில் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் நிலவில் துல்லியமாக தரை இறங்கி சாதனை படைத்தது. இந்த விண்கலம் நிலவில் ஏற்படும் இரவு நேரத்தை தாங்கும் திறனுடன் வடிவமைக்கப்படவில்லை. ஆனாலும், தொடர்ந்து 3வது முறையாக நிலவில் ஏற்படும் இரவு நாட்களை கடந்து நின்று சாதனை படைத்துள்ளது. இதனால் ஜப்பான் விண்வெளி மைய ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜப்பானின் விண்வெளி மையமான ஜாக்ஸா, ஸ்லிம் விண்கலம் பூமியிலிருந்து அனுப்பப்பட்ட செய்திக்கு மறுமொழி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இந்த […]

கடந்த ஜனவரி மாதத்தில் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் நிலவில் துல்லியமாக தரை இறங்கி சாதனை படைத்தது. இந்த விண்கலம் நிலவில் ஏற்படும் இரவு நேரத்தை தாங்கும் திறனுடன் வடிவமைக்கப்படவில்லை. ஆனாலும், தொடர்ந்து 3வது முறையாக நிலவில் ஏற்படும் இரவு நாட்களை கடந்து நின்று சாதனை படைத்துள்ளது. இதனால் ஜப்பான் விண்வெளி மைய ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜப்பானின் விண்வெளி மையமான ஜாக்ஸா, ஸ்லிம் விண்கலம் பூமியிலிருந்து அனுப்பப்பட்ட செய்திக்கு மறுமொழி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு இந்த செய்தி கிடைக்கப்பெற்றது. இதன் மூலம், ஒரு வார காலம் நீடித்த நிலவின் இரவு நேரத்தை ஸ்லிம் விண்கலம் தாங்கியுள்ளது. அதன்படி, மைனஸ் 274 டிகிரி ஃபாரன்ஹீட் கடும் குளிரை இந்த விண்கலம் தாங்கி நின்றுள்ளது. அத்துடன், விண்கலத்தின் முக்கிய பாகங்கள் நல்ல நிலைமையில் செயல்பாட்டில் உள்ளதாக, ஜப்பான் விஞ்ஞானிகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu