ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம், எச்3 என்ற பெயரில், புதிய வரிசை ராக்கெட்டை தயாரித்திருந்தது. செவ்வாய்க்கிழமை இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
முன்னதாக, சில தினங்களுக்கு முன்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், கோளாறு சரி செய்யப்பட்டு, நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், ராக்கெட் ஏவப்பட்ட பிறகு, இரண்டாம் நிலையில் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே, ராக்கெட் திட்டமிட்ட பாதையில் செல்ல முடியாத நிலை உருவானது. இந்நிலையில், மனிதர்கள் வசிக்கும் பகுதியில் ராக்கெட் விழுந்து ஆபத்தை ஏற்படுத்துவதை தடுக்க, ராக்கெட் வேண்டுமென்றே வெடித்து சிதறடிக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் அருகே, ஆழ்கடல் பகுதியில், எச் 3 ராக்கெட் மற்றும் அதன் இரண்டாம் நிலை ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்கள் பாதுகாப்பாக விழுந்தன. இந்த நிகழ்வு ஜப்பானிய மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.