ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட் வெடித்து சிதறியது

ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட் இன்று ஏவப்பட்டது. ஆனால், ஏவப்பட்ட சில வினாடிகளிலேயே வெடித்து சிதறியது. ஜப்பானை சேர்ந்த ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், முதல் முறையாக ராக்கெட் ஏவுதலை இன்று திட்டமிட்டு இருந்தது. ஏற்கனவே பலமுறை ஒத்திவைக்கப்பட்ட ராக்கெட் ஏவும் பணிகள் இன்று செயல்படுத்தப்பட்டன. வகயாமா மலைப்பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், சில வினாடிகளிலேயே நடுவானில் வெடித்து சிதறியது. இதன் காரணமாக, அந்த பகுதியில் சில மணி நேரங்களுக்கு புகை மூட்டம் […]

ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட் இன்று ஏவப்பட்டது. ஆனால், ஏவப்பட்ட சில வினாடிகளிலேயே வெடித்து சிதறியது.

ஜப்பானை சேர்ந்த ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், முதல் முறையாக ராக்கெட் ஏவுதலை இன்று திட்டமிட்டு இருந்தது. ஏற்கனவே பலமுறை ஒத்திவைக்கப்பட்ட ராக்கெட் ஏவும் பணிகள் இன்று செயல்படுத்தப்பட்டன. வகயாமா மலைப்பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், சில வினாடிகளிலேயே நடுவானில் வெடித்து சிதறியது. இதன் காரணமாக, அந்த பகுதியில் சில மணி நேரங்களுக்கு புகை மூட்டம் ஏற்பட்டது. ராக்கெட்டின் பாகங்கள் நொறுங்கி கீழே விழுந்ததில், தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஸ்பேஸ் ஒன் புத்தாக்க நிறுவனத்தின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ஒருவேளை இது வெற்றி பெற்றிருந்தால், ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட் என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றிருக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu