ஜெயந்தி சவுகான் - பிஸ்லரி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறார்

March 21, 2023

பிரபல மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லரியை, டாடா குழுமம் கையகப்படுத்த உள்ளதாக, கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், பிஸ்லரி நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சவுகான், “பிஸ்லரி நிறுவனத்தை விற்கும் எண்ணம் இல்லை. எனது மகள் ஜெயந்தி சவுகான் வர்த்தகத்தை தொடர்ந்து நிர்வகிக்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த வாரம், பிஸ்லரி உடனான ஒப்பந்தத்தை கைவிடுவதாக டாடா குழுமம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ரமேஷ் சவுகானின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. […]

பிரபல மினரல் வாட்டர் நிறுவனமான பிஸ்லரியை, டாடா குழுமம் கையகப்படுத்த உள்ளதாக, கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், பிஸ்லரி நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சவுகான், “பிஸ்லரி நிறுவனத்தை விற்கும் எண்ணம் இல்லை. எனது மகள் ஜெயந்தி சவுகான் வர்த்தகத்தை தொடர்ந்து நிர்வகிக்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த வாரம், பிஸ்லரி உடனான ஒப்பந்தத்தை கைவிடுவதாக டாடா குழுமம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, ரமேஷ் சவுகானின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஜெயந்தி சவுகான், ஏற்கனவே, பிஸ்லரி நிறுவனத்தின் துணைவேந்தராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர், பிஸ்லரி நிறுவனத்தின் ‘வேதிகா’ பிராண்டை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu