குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜே. டி. வேன்ஸ் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 50-ஆவது துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், டிரம்பின் கட்சியான குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் ஜே. டி. வேன்ஸ் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 50-ஆவது துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த வெற்றிக்கு பின்னர், ஜே. டி. வேன்ஸ் தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்து, தங்களை ஆதரித்த மக்களுக்கு நன்றி கூறி, மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவர், “இந்த உயர்ந்த பதவியில் சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளித்த அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நன்றி. என் மனைவிக்கும், என் கனவுகளை உணர்த்திய உங்களுக்கும் நன்றி! மேலும், அமெரிக்க மக்களுக்கு அவர்களின் நம்பிக்கைக்காக நன்றி! உங்கள் அனைவருக்காக போராடுவேன்” என்று தெரிவித்தார். ஜே. டி. வேன்ஸின் மனைவி உஷா சிலிகுரி, இந்திய வம்சாவளி பெண் ஆவார்.