அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ், கிட்டத்தட்ட 1 பில்லியன் மதிப்புடைய அமேசான் பங்குகளை விற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, தன்னிடம் உள்ள அமேசான் பங்குகளை ஜெஃப் பெஸாஸ் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கடந்த வாரம் கிட்டத்தட்ட 240 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பங்குகளை ஜெஃப் பெஸாஸ் விற்பனை செய்தார். அதை தொடர்ந்து, மேலும் அவர் 8 மில்லியன் முதல் 10 மில்லியன் பங்குகளை விற்கலாம் என கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.