புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார்.
கனடாவின் ராணுவ தளபதி வெயின் ஐயர் விரைவில் ஓய்வு பெற இருக்கிறார். இதனால் புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். இதன் வாயிலாக கனடா நாட்டின் வரலாற்றில் ராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் கடந்த 35 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஆயுதப்படைகளின் தொழில் சார் மற்றும் கலாச்சாரத்தின் தலைவராக அவர் உள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். அதோடு சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் கனடா நாட்டு படைகளை அவர் வழி நடத்தினார். 2019 முதல் 2020 ஆம் ஆண்டு வரை நேட்டோ மிஷன் ஈராக் திட்டத்தில் ஈடுபட்டு வழிநடத்தினார்.