ஜார்கண்ட் முதல்வர் ராஜினாமா

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கு சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார். ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன் […]

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கு சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செயல் தலைவருமான ஹேமந்த் சோரன் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன் பின்னர் ஜாமீனுக்காகா ஜார்கண்ட் உயர்நீதி மன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஹேமந்த் சோரன் குற்றவாளி என்பதற்கு போதிய காரணங்கள் இல்லை என்று கூறிய உயர்நீதிமன்றம் ஹேமந்த் சோரனை ஜாமீனில் விடுவித்துள்ளது. இதனை அடுத்து தற்போதைய முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளார். இந்நிலையில் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu