ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பட் பகுதியில், சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சுரங்கம் இன்று இடிந்து விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில், இதுவரை 3 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கப் பணியாளர்கள் பலர் சுரங்கத்திற்குள் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) நிறுவனத்தின் ஒரு பகுதி சுரங்கம் சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு, இன்று காலை 10:30 மணியளவில், இந்த விபத்து நேரிட்டுள்ளது. தற்போது, இந்த சுரங்கத்தில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள பலரும் உயிரிழக்க நேரலாம் என்று அஞ்சப்படுகிறது.