ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் இரு கட்டங்களில் நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தேர்தலை சந்திக்கின்றன, அதே நேரத்தில் பா.ஜ.க., ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.), ஐ.ஜ.த., மற்றும் லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.) ஆகியன ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டு குறித்து ஆலோசனை நடத்தின. அதன்படி பா.ஜ.க. 68 தொகுதிகளில், ஏ.ஜே.எஸ்.யூ. 10 தொகுதிகளில், ஐ.ஜ.த. 2 தொகுதிகளில், மற்றும் எல்.ஜே.பி. 1 தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.














