ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தனது நிதி சேவைகளை நிர்வகிப்பதற்காக, ‘ஜியோ பைனான்ஸ்’ என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் யுபிஐ பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள் போன்றவற்றை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமாக ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் இயங்கி வருகிறது. பல்வேறு நிதி சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. குறிப்பாக, யுபிஐ பரிவர்த்தனைகள், காப்பீடு, டிஜிட்டல் வங்கி சேவைகள் போன்றவற்றை வழங்குகிறது. அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் மேற்கொள்ளும் வகையில், ‘ஜியோ பைனான்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், கடன் சேவைகளையும் இந்த செயலி மூலம் வழங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.