இன்று முதல் மும்பை பங்குச் சந்தையில் இருந்து வெளியேறும் ஜியோ பைனான்சியல்

September 1, 2023

ரிலையன்ஸ் குழுமத்தின் நிதி அமைப்பான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், இன்று முதல் மும்பை பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுகிறது. பங்குச் சந்தையில் அறிமுகமான முதலே, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் சரிவுடன் காணப்பட்டது. மேலும், தொடர்ச்சியாக தனது லோயர் சர்க்யூட் அளவில் இருந்தது. எனவே, ஆகஸ்ட் 24 ஆம் தேதி பங்குச் சந்தையில் இருந்து நிறுவனம் வெளியேறுவதாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக, […]

ரிலையன்ஸ் குழுமத்தின் நிதி அமைப்பான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், இன்று முதல் மும்பை பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுகிறது.

பங்குச் சந்தையில் அறிமுகமான முதலே, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் சரிவுடன் காணப்பட்டது. மேலும், தொடர்ச்சியாக தனது லோயர் சர்க்யூட் அளவில் இருந்தது. எனவே, ஆகஸ்ட் 24 ஆம் தேதி பங்குச் சந்தையில் இருந்து நிறுவனம் வெளியேறுவதாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனது லோயர் சர்க்யூட் அளவை தொடவில்லை. அதைவிட உயர்வாக வர்த்தகமானது. எனவே, இன்று முதல், அனைத்து பங்குச் சந்தை நடவடிக்கைகளில் இருந்தும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் வெளியேற்றப்படுவதாக மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதே வேளையில், அண்மையில் நடந்த ரிலையன்ஸ் வருடாந்திர சந்திப்பில், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் காப்பீட்டு துறையில் கால் பதிக்க உள்ளதாக, முகேஷ் அம்பானி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu