ஜியோ ஹாட்ஸ்டார் புதிய ஸ்ட்ரீமிங் தளம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து புதிய ஸ்ட்ரீமிங் தளம் "ஜியோ ஹாட்ஸ்டார்" ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் 60% பங்குகளை, டிஸ்னி 37% பங்குகளை வைத்துள்ளது. இதில் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் உள்ளடக்கங்களை ஒரே தளத்தில் காண முடியும். புதிய பயனர்களுக்கான பிளான்கள் ₹149 முதல் ₹349 வரை உள்ளன. ஜியோ சினமாவில் ஐபிஎல் இலவசமாக பார்க்க முடிந்தாலும், ஜியோ ஹாட்ஸ்டாரில் சந்தா முறைக்கு மாற்றப்படும். இந்த தளத்தில் முக்கிய கிரிக்கெட் போட்டிகள், பிரீமியர் லீக், விம்பிள்டன், மற்றும் பல சர்வதேச விளையாட்டுகளும் ஸ்ட்ரீம் செய்யப்படும்.