ஜியோ நிறுவனத்தின் ஜியோ பாரத் கைபேசிகளின் வரிசையில், புதிதாக ஜியோ பாரத் பி1 என்ற 4ஜி தொழில்நுட்ப கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே சந்தைப்படுத்தப்பட்டுள்ள ஜியோ பாரத் வி2 மற்றும் கே1 கார்பன் மாடல்களில் இருந்து சற்று மேம்பட்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ பாரத் பி1 ஃபோர் ஜி கைபேசியின் விலை 1299 ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. இந்த கைபேசி, 2000 mah பேட்டரி தொழில்நுட்பத்தில், 2.4 இன்ச் தொடுதிரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கைபேசியில் கேமரா அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன், இதில் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.