ஜியோ ரீசார்ஜ் கட்டணம் உயர்வு

ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் தனது செல்போன் சேவையில் உள்ள அனைத்து ரீசார்ஜ் கட்டணங்களையும் 12 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிவடைந்த நிலையில் ஜியோ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு […]

ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் தனது செல்போன் சேவையில் உள்ள அனைத்து ரீசார்ஜ் கட்டணங்களையும் 12 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிவடைந்த நிலையில் ஜியோ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல்முறையாக செல்போன் சேவை கட்டணங்களை ஜியோ நிறுவனம் உயர்த்துவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu