5ஜி வேகத்தில் ஏர்டெல்லை முந்தியது ஜியோ - ஓக்லா அறிவிப்பு

October 17, 2022

இணையதள வேகத்தை குறித்து ஆய்வு செய்யும் நிறுவனமான ஓக்லா, இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தின் வேகம் குறித்து ஆராய்ந்து முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, 5ஜி தொழில்நுட்பம் மூலம் பதிவிறக்கம் செய்யும் வேகத்தின் அடிப்படையில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் இணையதள அமைப்புகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், ஏர்டெல் நிறுவனத்தை ஜியோ நிறுவனம் முந்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ஓக்லா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘ஸ்பீட் டெஸ்ட் இன்டெலிஜென்ஸ்’ என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 5ஜி இணையதள சேவையின் […]

இணையதள வேகத்தை குறித்து ஆய்வு செய்யும் நிறுவனமான ஓக்லா, இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தின் வேகம் குறித்து ஆராய்ந்து முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, 5ஜி தொழில்நுட்பம் மூலம் பதிவிறக்கம் செய்யும் வேகத்தின் அடிப்படையில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் இணையதள அமைப்புகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், ஏர்டெல் நிறுவனத்தை ஜியோ நிறுவனம் முந்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து ஓக்லா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘ஸ்பீட் டெஸ்ட் இன்டெலிஜென்ஸ்’ என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 5ஜி இணையதள சேவையின் வேகம் பரிசோதிக்கப்பட்டது. குறைந்தபட்சமாக, 16.27 எம்பிபிஎஸ் முதல் அதிகபட்சமாக 809.94 எம்பிபிஎஸ் வரம்புக்குள் உள்ள இணையதள இணைப்புகள் இந்த பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. தில்லியில் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையில் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பதிவிறக்க வேகம் 197.98 எம்பிபிஎஸ் வரை இருந்தது அதே வேளையில், ஜியோ நிறுவனத்தின் 5ஜி பதிவிறக்க வேகம் 598.58 எம்பிபிஎஸ் வரை இருந்தது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாரணாசி பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி போக்குவரத்து வேகம் 560.57 எம்பிபிஎஸ் வரை இருந்தது. ஆனால், கொல்கத்தாவில் 271.07 எம்பிபிஎஸ் வரை மட்டுமே ஏர்டெல் நெட்வொர்க்கின் வேகம் இருந்தது. அதே சமயத்தில், ஜியோ நெட்வொர்க்கின் வேகம் 515.38 எம்பிபிஎஸ் வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பகுதிகளிலும் ஏர்டெல்லை விட ஜியோ சிறப்பாக செயல்படுவது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஏர்டெல் நிறுவனத்தை விட ஜியோ நிறுவனம், அதிகமாக ஏலத்தை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu