இந்தியாவின் டிஜிட்டல் யுக மாற்றத்திற்கு, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை முக்கியமாக கருதப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில், ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் இந்தியாவின் 6 முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன், லட்சக்கணக்கான பயனர்களிடமிருந்து சாதகமான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
எனவே, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஜியோ 5ஜி சேவை தற்போது முதல் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிமுகச் சலுகையாக, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் வாடிக்கையாளர்களுக்கு 1 Gbps வரை இலவச டேட்டா வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் 5ஜி சேவைகள் மூலம், 500 எம்பிபிஎஸ் முதல் 1 ஜிபிபிஎஸ் வரை இணைய வேகத்தை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.