யுபிஐ, வாட்ஸ் அப், ஓடிடி போன்ற அம்சங்களை கொண்ட புதிய ஜியோ பாரத் கைபேசிகள் வெளியீடு

November 8, 2023

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 999 ரூபாய்க்கு ஜியோ பாரத் என்ற 4ஜி கைபேசியை அறிமுகம் செய்திருந்தது. வெறும் அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டதாக இந்த கைபேசிகள் இருந்தன. தற்போது, இவற்றில், வாட்ஸ் அப், ஓடிடி மற்றும் யுபிஐ கட்டணம் ஆகிய சேவைகள் கொண்டுவரப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.ஜியோ போன் பிரைமா (JioPhone Prima) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கைபேசி, 2599 ரூபாய்க்கு வெளியிடப்படுகிறது. 4ஜி தொழில்நுட்பத்தில், Kai OS மூலம் இயங்கும் இந்த கைப்பேசியில், யூடியூப், […]

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 999 ரூபாய்க்கு ஜியோ பாரத் என்ற 4ஜி கைபேசியை அறிமுகம் செய்திருந்தது. வெறும் அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டதாக இந்த கைபேசிகள் இருந்தன. தற்போது, இவற்றில், வாட்ஸ் அப், ஓடிடி மற்றும் யுபிஐ கட்டணம் ஆகிய சேவைகள் கொண்டுவரப்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.ஜியோ போன் பிரைமா (JioPhone Prima) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கைபேசி, 2599 ரூபாய்க்கு வெளியிடப்படுகிறது. 4ஜி தொழில்நுட்பத்தில், Kai OS மூலம் இயங்கும் இந்த கைப்பேசியில், யூடியூப், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், பேஸ்புக், வாட்ஸ் அப், யுபிஐ போன்ற பல அம்சங்கள் இடம்பெறுகின்றன. 2.4 இன்ச் தொடுதிரையுடன், 1800 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன், 23 மொழிகளில் இயங்கும் வகையில் இந்த கைபேசி வடிவமைக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ மார்ட் மற்றும் அமேசான் போன்ற இணைய வர்த்தக தளங்களிலும், பிரபல கைப்பேசி சில்லறை விற்பனையகங்களிலும் ஜியோ போன் ப்ரைமா விற்பனைக்கு வெளியாகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu