அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக தொழிலாளர்கள் போராட்டத்தில் அதிபர் பங்கேற்பு

September 27, 2023

அமெரிக்காவில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில், முதல் முறையாக அமெரிக்க அதிபர் பங்கேற்று உள்ளார். வாகன தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய பலன்களை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கு பெறும் முதல் அமெரிக்க அதிபர் என்ற வரலாற்றை ஜோ பிடன் நிகழ்த்தியுள்ளார். நேற்று தொழிலாளர் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக […]

அமெரிக்காவில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில், முதல் முறையாக அமெரிக்க அதிபர் பங்கேற்று உள்ளார்.
வாகன தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய பலன்களை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கு பெறும் முதல் அமெரிக்க அதிபர் என்ற வரலாற்றை ஜோ பிடன் நிகழ்த்தியுள்ளார். நேற்று தொழிலாளர் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கலந்து கொண்ட அவர், ஆட்டோமொபைல் தொழிலாளர் கூட்டமைப்பு சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்திருந்தது கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், ஜோ பிடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu