போர் பரவாமல் இருக்க அமெரிக்க உதவியை நாடும் ஜோர்டான்

October 30, 2023

ஹமாஸ் அமைப்பை ஒழிக்க இஸ்ரேல் உறுதி கொண்டுள்ளது. எனவே காசா பகுதியில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியும், குண்டுகள் வீசியும் தீவிரமாக போர் செய்து வருகின்றது. இந்நிலையில் இந்த போர் தங்கள் நாட்டு எல்லைக்குள் பரவ வாய்ப்பு இருக்கிறது என்று ஜோர்டான் அரசு அஞ்சுகிறது. இதனால் ஜோர்டான் தன்னுடைய நட்பு நாடான அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது. இது குறித்து ஜோர்டான் நாட்டு ராணுவ தொடர்பாளர் முஸ்தபா கூறியுள்ளதாவது, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் […]

ஹமாஸ் அமைப்பை ஒழிக்க இஸ்ரேல் உறுதி கொண்டுள்ளது. எனவே காசா பகுதியில் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியும், குண்டுகள் வீசியும் தீவிரமாக போர் செய்து வருகின்றது. இந்நிலையில் இந்த போர் தங்கள் நாட்டு எல்லைக்குள் பரவ வாய்ப்பு இருக்கிறது என்று ஜோர்டான் அரசு அஞ்சுகிறது. இதனால் ஜோர்டான் தன்னுடைய நட்பு நாடான அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.
இது குறித்து ஜோர்டான் நாட்டு ராணுவ தொடர்பாளர் முஸ்தபா கூறியுள்ளதாவது, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் இஸ்ரேலுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை எங்கள் நாட்டு வழியாக எடுத்துச் செல்வதாக வரும் செய்திகள் உண்மையில்லை. அதே சமயம் எங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை தவிர்க்க அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளை எங்கள் நாட்டு எல்லையில் நிறுத்துமாறு அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார். ஈரான் மற்றும் சிரியாவில் இருந்து பயங்கரவாதிகள் ஜோர்டான் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க கடந்த 2011 இல் இருந்து அந்நாட்டிற்கு அமெரிக்கா உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில் அமெரிக்காவின் இராணுவ நிதியை ஜோர்டான் பெரிய அளவில் பெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu