பனாமா நாட்டின் புதிய அதிபராக ஜோஸ் ரவுல் முளினோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பனாமா நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, மக்களின் சுரங்க எதிர்ப்பு போராட்டம், கடுமையான வறட்சி ஆகியவற்றுக்கு மத்தியில் இவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் ரிக்கார்டோ மார்ட்டினல்லி மீது பண மோசடி புகார் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பெயரில் அவர் 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். எனவே, அவருக்கு மாற்றாக, கடைசி நேரத்தில் ஜோஸ் ரவுல் முளினோ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனினும், அவரை எதிர்த்து போட்டியிட்டவரை காட்டிலும் 9 புள்ளிகள் அதிகமாக பெற்று வெற்றி வாய்ப்பை பறித்துக் கொண்டார். அதிபர் வாக்குப்பதிவில் 34.35% வாக்குகள் பதிவாகி இருந்தன. கடுமையான அரசியல் நெருக்கடி சூழலில், பனாமா மக்கள் தனக்கு வழங்கிய ஆதரவை, தனது பொறுப்பான பணி மூலம் நிறைவேற்றுவதாக முளினோ உறுதி அளித்துள்ளார்.














