கடந்த ஜனவரி மாதத்தில், ஜே எஸ் டபிள்யூ நிறுவனத்தின் கச்சா ஸ்டீல் உற்பத்தி, 15% உயர்ந்து, 18.91 லட்சம் டன் அளவில் பதிவாகியுள்ளது. பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்புக்கு, ஜே எஸ் டபிள்யூ சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது நிறுவனத்தின் வரலாற்றில் பதிவான அதிகபட்ச உற்பத்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜே எஸ் டபிள்யூ நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் தட்டையான ஸ்டீல் பொருட்கள் உற்பத்தி 14% உயர்ந்து, 14.24 லட்சம் டன் அளவில் பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் நீளமான ஸ்டீல் பொருட்கள் உற்பத்தியும் 14% உயர்ந்து, 4.25 லட்சம் டன் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே, கடந்த 2022 ஜனவரி மாதத்தில், 12.47 மற்றும் 3.74 லட்சம் டன் அளவில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜனவரி மாதத்தில், நிறுவனத்தின் அனைத்து கட்டமைப்புகளும் முழுமையாக உபயோகிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.