ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் 18000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அதற்காக, பாண்டு விற்பனையில் ஈடுபட நிறுவனத்தின் வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி, சர்வதேச சந்தைகளில் ஒரு பில்லியன் டாலர்கள் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 7000 கோடி ரூபாய், வாரண்டியுடன் கூடிய, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் வெளியீட்டின் மூலம் திரட்டப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், 3000 கோடி ரூபாய், கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல்களை நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மூலம், 3000 கோடி ரூபாய் பொதுமக்கள் முதலீட்டிற்கு வழங்கப்படுகிறது. மேலும், நிறுவனத்தின் அறிக்கை படி, கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் 12% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 46962 கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.