நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்க்கு ஒரு கோடி பணம் கொடுத்ததாக அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து நீதிமன்றத்திற்கு வெளியே பொதுவெளியில் பேசக்கூடாது என அவருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் அதை மீறி பொதுவெளியில் வழக்கில் தொடர்புடையவர்களை குறித்து விமர்சித்து வந்தார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்பட்டார். அப்பொழுது நடைபெற்ற விசாரணையையடுத்து நீதிபதி அவருக்கு ஒன்பதாயிரம் டாலர், அதாவது சுமார் 7.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அதோடு நீதிமன்ற உத்தரவை மீண்டும் மீறினால் அவர் சிறை செல்ல நேரிடும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.