நீதித்துறையின் புதிய வெளிப்படைத்தன்மை முயற்சியாக நீதிபதிகள் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை இணையத்தில் வெளியிட சுப்ரீம் கோர்ட் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முடிவு செய்தது. தற்போது, 33 நீதிபதிகளில் 21 பேரின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் வீட்டுவசதி, நிலங்கள், வங்கி சேமிப்புகள், தங்கம், பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தலைமைய நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் அடுத்த தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர். கவாய் ஆகியோரின் சொத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள நீதிபதிகளின் தகவல்களும் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














