ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் (ESA) ஜூபிட்டர் ஐசி மூன்ஸ் எக்ஸ்ப்ளோரர் (JUICE) - ஜூஸ் விண்கலம், ஆகஸ்ட் 19, 2024 அன்று நிலவைச் சுற்றி "ஈர்ப்பு உதவி" பறத்தல் செய்தது. இது நிலப்பரப்பிலிருந்து 465 மைல் (750 கி மீ) தொலைவில் வந்தது. இந்த நடவடிக்கை, இரட்டை ஈர்ப்பு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணமாகும். மேலும், இன்று, பூமியைச் சுற்றி இரண்டாவது பறத்தல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூஸ் விண்கலத்தின் கேமராக்கள் உதவியுடன் “பறத்தல் படம்” பிடிக்கப்பட்டுள்ளது. மூல படங்களை ESA நேரடி ஒளிபரப்பின் போது பகிர்ந்துள்ளது. இந்த வாரத்தின் நடவடிக்கைகள், ஜூஸ் விண்கலத்தின் மொத்த பயணத்தை சுருக்கி, 2025 ஆகஸ்டில் வீனஸ் ஈர்ப்பு உதவி பெற்று, 2031 ஜூலைக்குள் வியாழனை அடைவதற்கான பாதையில் கொண்டு சேர்க்கும்.