இந்த ஜூலை மாதம் 1.20 லட்சம் ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கும் என்று கால நிலை விஞ்ஞானி கார்ஸ்டன் ஹவுஸ்டீன் தெரிவித்தார்.
தற்போது ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் பரவி வருகிறது. நிலக்கரி, எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மனித செயல்பாடுகளால் பூமி வெப்ப நிலை 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஐ.நா.வில் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சீனாவின் 126 டிகிரி அளவுக்கு வெப்ப நிலை பதிவாகி இருந்ததையும், கனடாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதையும் ஆராயப்பட்டது. இந்த வெப்ப நிலை தொடர்ந்து நீடிக்கும்போது பனிப்பாறைகள் மேலும் உருவாகி கடல்நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். உலகின் மிகவும் குளிர் நிலவக்கூடிய அண்டார்டிகா பகுதியிலும் வெப்ப காற்றை உணர முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 1.20 லட்சம் ஆண்டுகளில் மிகவும் வெப்பமான மாதமாக இந்த ஜூலை இருக்கும் என்று கால நிலை விஞ்ஞானி கார்ஸ்டன் ஹவுஸ்டீன் தெரிவித்தார்.