கடந்த ஜூன் மாதத்தில் அரசாங்கத்திற்கு ஜிஎஸ்டி வரி மூலம் கிடைத்த வருவாய் 1.61 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2022 ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாயை விட 12% உயர்வாகும். மேலும், ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், 1.6 லட்சம் கோடியை தாண்டி வருவாய் பதிவு செய்யப்படுவது இது நான்காவது முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அமைச்சகத்தின் அறிக்கை படி, ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் 167497 கோடி ஆகும். அதில், மத்திய ஜிஎஸ்டி 31013 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி 38292 கோடியாகவும், ஐ ஜி எஸ் டி 80292 கோடியாகவும், செஸ் வரி 11900 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், வரி பகிர்வுக்கு பிறகு, மத்திய அரசின் வரி வருவாய் 67237 கோடியாகவும், மாநில அரசுகளின் வரி வருவாய் 68561 கோடியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.