ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் துறையில் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை திறப்பு

March 4, 2024

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் துறையில் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை திறக்கப்பட்டுள்ளது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆலையை தொடங்கி வைத்தார். இது தற்சார்பு இந்தியாவின் இலக்கை நோக்கிய முக்கிய மைல்கல் என அவர் கூறினார். “ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் நிறுவனத்தின் பசுமை ஹைட்ரஜன் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற முறையில், உற்பத்தி துறையில் புதிய பாதையை வகுத்துள்ளது. இது இந்தியாவின் ஸ்டீல் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். இந்தியா வல்லரசாக […]

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் துறையில் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை திறக்கப்பட்டுள்ளது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆலையை தொடங்கி வைத்தார். இது தற்சார்பு இந்தியாவின் இலக்கை நோக்கிய முக்கிய மைல்கல் என அவர் கூறினார்.

“ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் நிறுவனத்தின் பசுமை ஹைட்ரஜன் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற முறையில், உற்பத்தி துறையில் புதிய பாதையை வகுத்துள்ளது. இது இந்தியாவின் ஸ்டீல் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும். இந்தியா வல்லரசாக மாறுவதற்கு, ஸ்டீல் துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில், ஸ்டீல் உற்பத்தியில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு இந்தியாவின் எதிர்கால சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” - இவ்வாறு அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu