இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சட்டசபையில் மானிய கோரிக்கைகள் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில், 42 கோடி ரூபாய் செலவில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் உதவிகள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதில் கிராமப்புற இளைஞர்கள், விளையாட்டில் ஆர்வமுடைய இளைஞர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இதில் பெரும்பாலான வீரர்கள், இளைஞர்களுக்கு போதுமான விளையாட்டு உபகரணம் இல்லை. எனவே கருணாநிதி நூற்றாண்டு பொன்விழா ஆண்டான 2023 டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 42 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் 33 விளையாட்டு பொருட்கள் அடங்கிய கலைஞர் கிட் வழங்க தமிழக அரசு டெண்டர் வெளியிட்டு உள்ளது.