டெல்லி பயணத்தில் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் பங்கேற்பு

December 19, 2022

டெல்லியில் டிசம்பர் 24-ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். மக்களவைத் தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறுவதையொட்டி, அதற்கான பணிகளை தற்போதில் இருந்தே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. இந்நிலையில் 3-வது முறையாக மநீம கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை அண்ணாநகரில் நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இன்றைய ஆலோசனை கூட்டத்தில் […]

டெல்லியில் டிசம்பர் 24-ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

மக்களவைத் தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறுவதையொட்டி, அதற்கான பணிகளை தற்போதில் இருந்தே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. இந்நிலையில் 3-வது முறையாக மநீம கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை அண்ணாநகரில் நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன் என்றார். பின்னர் துணைத் தலைவர் மவுரியா செய்தியாளர்களிடம் கூறும்போது, வருகின்ற 24-ம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பயணத்தில் டெல்லியில் கமல்ஹாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu