ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதனால் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை நியமிக்க ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனது வேட்பு மனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் பதவி காலத்தில் அதிபராக எனது கடமைகளில் முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளேன். கமலா ஹாரிசை துணை தலைவராக தேர்ந்தெடுத்தது தான் நான் எடுத்த சிறந்த முடிவு. எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் வருவதற்கு என்னுடைய முழு ஆதரவும் ஒப்புதலும் உண்டு. ஜனநாயகவாதிகள் ஒன்று கூடி டிரம்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.