கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர். மனுக்கள் வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும்.
இதையடுத்து தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சட்டசபை தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 2,427 பேர் ஆண்களும், 184 பேர் பெண்களும், 3-ம் பாலினத்தினர் 2 பேரும் அடங்குவர்.














