கர்நாடகா - 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, கடந்த மே 20ம் தேதி, மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் பதவியேற்று கொண்டனர். அவர்களுடன், அன்றைய தினத்தில், 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த நிலையில், இன்று கர்நாடக அமைச்சரவையில் 24 பேர் பதவி ஏற்று கொண்டனர். பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் […]

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, கடந்த மே 20ம் தேதி, மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் பதவியேற்று கொண்டனர். அவர்களுடன், அன்றைய தினத்தில், 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த நிலையில், இன்று கர்நாடக அமைச்சரவையில் 24 பேர் பதவி ஏற்று கொண்டனர்.

பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் முன்னிலையில், கர்நாடக மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, தற்போது, கர்நாடக சட்டப்பேரவை 34 அமைச்சர்கள் உடன் முழுமை அடைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu