கர்நாடகா அமைச்சரவை மே 18-ல் பதவியேற்க உள்ளது.
கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் முதல்வர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வரை கட்சி மேலிடம் தேர்வு செய்து அறிவித்த பிறகு, புதிய அமைச்சரவை வரும் 18-ம் தேதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.