கர்நாடக மாநில பட்ஜெட் - 3.71 லட்சம் கோடி மதிப்பில் தாக்கல்

February 16, 2024

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகளை வகிக்கும் சித்தராமையா, அந்த மாநிலத்தின் 15 வது பட்ஜெட் அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். மொத்தம் 3.71 லட்சம் கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநில பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்: பெங்களூரு நகரத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை, வர்த்தக மையங்கள், உணவகங்கள், கடைகள் ஆகியவை திறந்திருக்க தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வர்த்தக வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு வகிக்கும் என […]

கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் பதவிகளை வகிக்கும் சித்தராமையா, அந்த மாநிலத்தின் 15 வது பட்ஜெட் அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். மொத்தம் 3.71 லட்சம் கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநில பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

பெங்களூரு நகரத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை, வர்த்தக மையங்கள், உணவகங்கள், கடைகள் ஆகியவை திறந்திருக்க தடை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வர்த்தக வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் பல இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், போக்குவரத்து சேவைகள் போன்றவை மேம்படுத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெங்களூருவில் ஐந்தாம் கட்ட காவிரி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு 110 லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu