தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்து விடுவதற்கு கர்நாடகா தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவிற்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் திறந்து விடக் கோரி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. ஆனால் தங்களுக்கே போதுமான தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறந்து விடும் சூழல் இல்லை என கூறி கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அனைத்து கட்சி எம்பிகளுடன் நடத்திய ஆலோசனையில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவெடுத்துள்ளனர். அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் எங்களால் இயன்ற அளவுக்கு நீர் திறந்து விடப்பட்டது தற்போது நீர் திறந்து விடுவதற்கான சாத்தியம் இல்லாத நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது இதனை கருத்தில் கொள்ளாமல் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.காவிரி தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் இந்த அவசர மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.