மத்திய அரசு கர்நாடகத்துக்கு மேகதாது அணை கட்ட அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி ஆற்றை பங்கிட்டு கொள்வது தொடர்பாக வரும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் ஆனது இரு மாநிலங்களுக்கிடையே காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது. ஆனால் கர்நாடகா உரிய நீரை திறந்து விடாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே 9000 கோடியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஒப்புதல் தருமாறு மத்திய அரசுக்கு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்திய அரசு மேகதாது அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய நிறுவன ஆணையம் இன்று வரை எவ்வித ஒப்புதலும் வழங்கவில்லை.