கர்த்தவ்ய பாதை என்று பெயர் பலகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான சாலையின் பெயர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 'கிங்ஸ் வே' என அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின் இந்த பெயர் ராஜபாதை என மாற்றப்பட்டது.
இந்நிலையில் காலனி ஆதிக்கத்தின் தாக்கத்துடன் உள்ள பெயர்களை மாற்றும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இதையடுத்து, டெல்லி மாநகராட்சி சிறப்பு கூட்டத்தில் கடந்த 7ம் தேதி ராஜபாதையின் பெயரை மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் கர்த்தவ்ய பாதை என்ற பெயரை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், இந்தியா கேட் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ராஜபாதை என்ற பெயர் பலகைகள் மாற்றப்பட்டு நேற்று புதிய பெயர் பலகைகள் வைக்கப்பட்டன. பச்சை நிற பலகையில் வெள்ளை நிற எழுத்துக்களுடன் கூடிய புதிய பலகையில் நான்கு மொழிகள் இடம்பெற்றுள்ளன.