கருணாநிதி நூற்றாண்டு விழா 2-ந் தேதி தொடக்கம் 

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 2-ந் தேதி தொடங்கி வைக்கிறார். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தி.மு.க. சார்பில் மிகப்பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த முன்னோர்களுக்கு பொற்கிழி வழங்குவது, தி.மு.க. குடும்ப மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, கருத்தரங்கம் பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். […]

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 2-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தி.மு.க. சார்பில் மிகப்பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் தோறும் கருணாநிதிக்கு சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த முன்னோர்களுக்கு பொற்கிழி வழங்குவது, தி.மு.க. குடும்ப மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, கருத்தரங்கம் பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் பயன்பெறும் வகையில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விழாவின் முன்னேற்பாடாக சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற 2-ந்தேதி கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இலட்சினை வெளியிட உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu