கரூர் வைஸ்யா வங்கியின் நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2024 ஆம் நிதி ஆண்டுக்கான ஒட்டுமொத்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபத்தில் வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில் ஒட்டுமொத்தமாக கரூர் வைஸ்யா வங்கியின் நிகர லாபம் 1605 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் வைஸ்யா வங்கியின் வரலாற்றில் பதிவான அதிகபட்ச வருடாந்திர லாபம் இதுவாகும். மேலும், முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 45.1% உயர்வாகும். கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில், கரூர் வைஸ்யா வங்கியின் வட்டி வருவாய் 13.7% உயர்ந்து 3809 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டை பொறுத்தவரை, நிகர லாபம் 456 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வருடாந்திர அடிப்படையில் இது 34.9% உயர்வாகும்.














