தமிழகத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கரூர் வைஸ்யா வங்கி, தனது ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் 56.77% உயர்ந்து 359 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை செயல் அதிகாரி பி ரமேஷ் பாபு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், வங்கியின் ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு 13.72% உயர்ந்து 147671 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியை எட்டியதற்காக வங்கியின் மீது நம்பிக்கை வைத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக்கு வட்டி மூலம் கிடைத்த நிகர வருமானம் 20.24% உயர்ந்து 897 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாராக்கடன் ஒதுக்கீட்டுக்கு முந்தைய லாபம் 36.42% உயர்ந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் மாத இறுதியில், வங்கியின் செயல்பாட்டு லாபம் 648 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், வங்கியின் வாராக்கடன் 1.99% ஆக குறைந்துள்ளது.














