வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
உ.பி.யின் புகழ்பெற்ற வாரணாசி நகரில், ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி 19-ம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் ரயில்வே, சுற்றுலா மற்றும் கலாச்சார துறைகள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வருகின்றன. தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு உள்ளிட்ட பல அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் இது நடைபெறுகிறது.
வாரணாசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இந்நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த பழம்பெரும் மத்திய கல்வி நிறுவனத்துடன் சென்னை ஐஐடியும் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் பங்கு கொள்கிறது.














