ஜம்மு - காஷ்மீர் எல்லையில் 2 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. இதனால் எல்லையில் ஊடுருவ முயன்றது முறியடிக்கப்பட்டது. இந்திய ராணுவத்திற்கு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்குரிய வகையில் ஊடுருவ முயற்சி செய்வதாக ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் காஷ்மீர் போலீஸுடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில்பூஞ்ச் செக்டாரில் 2சிறிய குழு ஊடுருவல் தடுக்கப்பட்டதாகவும், ஒரு பெரிய குழு ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு உதவியதால் 3 ஊழியர்களை காஷ்மீர் அரசு வேலையில் இருந்து நீக்கி உள்ளது. தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவ்வப்போது ஜம்மு-காஷ்மீரில் இந்தியா பாகிஸ்தான் எல்லை வழியாக பயங்கரவாதிகள் எல்லை மீறி ஊடுருவும் சம்பவம் நடைபெற்று வருகின்றது. இருப்பினும் இந்திய வீரர்கள் காஷ்மீர் போலீஸுடன் இணைந்து ஊடுருவலை தொடர்ந்து முறியடித்து வருகிறார்கள்.