ரஷியாவில் நடைபெற்ற உலக வலுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி தங்கப் பதக்கம் வென்றார்.
உலக வலுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் நோவோசிர்ஸக் நகரில் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 4 வீரர்கள் பங்கேற்றனர், அதில் தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி தனிப்பட்ட சாதனை படைத்தார். 48 கிலோ உடல் எடை பிரிவில் ஜூனியர் பிரிவில் பங்கேற்ற அவர், பெஞ்ச் மற்றும் டெட்லிப்ட் முறையில் மொத்தம் 105 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த கஸ்தூரி, போட்டியில் வெற்றியை அடைந்த பின்னர் ரஷியாவிலிருந்து டெல்லி வழியாக சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை மாவட்ட வலுதூக்கும் சங்க பொதுச்செயலாளர் எஸ்.பகவதி மற்றும் நிர்வாகிகள், உறவினர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.