கிண்டியில் கட்டபொம்மன், மருது சகோதரர் சிலைகள் விரைவில் திறப்பு    - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 

January 25, 2023

கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் கட்டபொம்மன், மருது சகோதரர் சிலைகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் செய்தித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், செய்தித் துறையின் சார்பில், காந்தி மண்டபத்தில் ஏற்கெனவே உள்ள தலைவர்களின் அரங்கங்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அரங்கத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் அரங்கம், மொழிக் காவலர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கம் பராமரிக்கப்படுவதோடு, […]

கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் கட்டபொம்மன், மருது சகோதரர் சிலைகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் செய்தித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், செய்தித் துறையின் சார்பில், காந்தி மண்டபத்தில் ஏற்கெனவே உள்ள தலைவர்களின் அரங்கங்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அரங்கத்தில் உள்ள புகைப்படங்கள் மற்றும் அரங்கம், மொழிக் காவலர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கம் பராமரிக்கப்படுவதோடு, புதிதாக அயோத்திதாசப் பண்டிதருக்கு உருவச் சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார். இதன்படி, தற்போது 60 சதவீதபணிகள் முடிவுற்றுள்ளன.

வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்குச் சிலைகளை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிவுற்ற பிறகு ஒவ்வொன்றாக மக்கள் பார்க்கக்கூடிய வகையில் திறக்கப்படும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu