கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து - 42 பேர் உயிரிழப்பு

October 30, 2023

கஜகஸ்தானின் காரகண்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உண்டு. அங்கு கோஸ்டேன்கோ என்ற சுரங்கம் உள்ளது. அதனை மீட்டல் டெம்ரிடா என்ற தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அச்சமயம் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர். இந்த தீ விபத்து மீத்தேன் வாயு கசிவால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 42 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் 14 பேர் மாயமாகியுள்ளனர். இவர்களை காவல்துறையினர் […]

கஜகஸ்தானின் காரகண்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உண்டு. அங்கு கோஸ்டேன்கோ என்ற சுரங்கம் உள்ளது. அதனை மீட்டல் டெம்ரிடா என்ற தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அச்சமயம் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தனர். இந்த தீ விபத்து மீத்தேன் வாயு கசிவால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 42 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் 14 பேர் மாயமாகியுள்ளனர். இவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த கஜகஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. கஜகஸ்தான் அதிபர் காசிம் மற்றும் ரஷ்யா அதிபர் புடின் ஆகியோர் இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu